6 மணிக்கு சர்ப்ரைஸ் இருக்கு: 'வலிமை' நடிகரே டுவிட் செய்ததால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Sunday,July 11 2021]

தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியானதை அடுத்து ‘வலிமை’ மோஷன் போஸ்டர் குறித்த ஹேஷ்டேக், கடந்த மூன்று மணி நேரமாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டு வருட காத்திருப்புக்குப் பின் ‘வலிமை’ அப்டேட் வருவதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பதும் இன்று விடிய விடிய ‘வலிமை’ ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்டாக்க திட்டமிட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ‘வலிமை’ படத்தின் படக்குழுவினர் மோஷன் போஸ்டர் வெளியாவதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக முன்னறிவிப்பின்றி இந்த மோஷன் போஸ்டரை வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் வில்லனாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ’இன்று மாலை 6 மணிக்கு சர்ப்ரைஸ் இருக்கு’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ‘வலிமை’ மோஷன் போஸ்டர் இன்று வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த முதல்வர்: மாணவர்கள் உற்சாகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை மாநில முதல்வர்

திருப்பதியில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை: நடிகை நமீதா பேட்டி!

திருப்பதிக்கு கணவருடன் சுவாமி தரிசனம் செய்யச் சென்றிருந்த நடிகை நமீதா, திருப்பதியில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 

விஜய்காந்த் வீட்டிற்கே சென்று இன்ப அதிர்ச்சி முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது உடல் நலம் விசாரித்தது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. 

இன்று வெளியாகின்றதா 'வலிமை' பர்ஸ்ட்லுக் போஸ்டர்?

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு 5 நாள் நடைபெறும் என்றும் இத்துடன் 'வலிமை'

13 வயது மாற்றுத்திறனாளி சாதனை சிறுவனுக்கு வாய்ப்பு அளித்த டி.இமான்!

கேரளாவைச் சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தான் இசையமைக்கும் படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ள இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது