'வலிமை' படத்துக்காக அஜித் கொடுத்த சவால்: யுவன்ஷங்கர் ராஜா

  • IndiaGlitz, [Thursday,October 22 2020]

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த படம் குறித்து யுவன் சங்கர் ராஜா ஒரு சில தகவல்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்

‘நேர் கொண்ட பார்வை’ படத்திற்கு இசை அமைக்கும் போதே அஜித் எனக்கு போன் செய்து பில்லா, பில்லா-2, மங்காத்தா என்று நிறைய தீம் மியூசிக் கிட்டார் வைத்து பண்ணி விட்டோம். ஆனால் ’வலிமை’ படத்தில் கிட்டார் இல்லாமல் பின்னணி இசை அமைக்க முயற்சி செய்யுங்கள்’என்று கூறினார்

அவருடைய வார்த்தையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, கிட்டார் பயன்படுத்தாமல் ’வலிமை’ படத்தில் ஒரு தீம் மியூசிக் கம்போஸ் செய்து இருக்கிறேன். மேலும் இதுவரை அந்த படத்தின் மூன்று பாடல்கள் முடிந்துவிட்டது. ஒரு சின்ன தீம் மியூசிக்கும் முடிந்துவிட்டது என்று யுவன்ஷங்கர் ராஜா அந்த பேட்டியில் கூறியுள்ளார்

கிட்டார் இல்லாமல் தீம் மியூசிக் கம்போஸ் செய்திருக்கும் யுவனின் அந்த தீம் மியூசிக்கை கேட்க அஜித் மற்றும் யுவனின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது