'வலிமை' சிங்கிள் பாடல் அப்டேட் செய்த யுவன்ஷங்கர் ராஜா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்,
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடலை கேட்க தயாராகுங்கள் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து இன்று ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாவது யுவன் சங்கர் ராஜாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது டுவிட்டில் விக்னேஷ் சிவனை டேக் செய்து உள்ளதை அடுத்து இந்த பாடலை எழுதியது விக்னேஷ் சிவன் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது
அஜித்குமார், ஹூமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார் என்பதும் போனிகபூர் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Get ready for #ValimaiFirstSingle #30YearsOfAjithKumar @SonyMusicSouth @BoneyKapoor @VigneshShivN #HVinoth
— Raja yuvan (@thisisysr) August 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com