close
Choose your channels

அஜித் இல்லாமலேயே ஆரம்பிக்கப்பட்ட 'வலிமை' படப்பிடிப்பு: பரபரப்பு தகவல் 

Thursday, September 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை அடுத்து பல திரைப்படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமானது. இதனை அடுத்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அவுட்டர் ரிங் ரோடில் ’வலிமை’ படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இதில் ஸ்டண்ட் கலைஞர்கள் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இதே லோகேஷனில் அஜீத் நடித்த பைக் சாக்ச காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் ஆனால் அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் விரைவில் அஜீத் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment