'வலிமை' வெளிநாட்டு படப்பிடிப்பு குறித்த சூப்பர் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக செய்திகள் வெளியான நிலையில் ஒரே ஒரு வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டும் இன்னும் மீதம் இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் வெளிவந்துள்ளது.
’வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இதற்காக படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவில் 5 நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’வலிமை’ திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தப் படத்தைத் திரையரங்கில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அதுவும் முக்கிய திருவிழா நாட்களில் தான் வெளியிட வேண்டும் என்றும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனவே ’வலிமை’ திரைப்படம் ஆயுத பூஜை, தீபாவளி அல்லது பொங்கல் போன்ற ஆகிய நாட்களில் ஒன்றில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் கார்த்திகேயா வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் பயிற்சியில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout