வலிமை தயாரிப்பாளரின் அதிரடி டிவிட்… ஆனாலும் சோகம் தீராத தல ரசிகர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் தனது ஹிட் படமான நேர்க்கொண்ட பார்வையைத் தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்தப் படத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் தற்போது வரை ரகசியகமாவே வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் வலிமை படத்தைப் பற்றிய எந்த அப்டேட்டும் தெரியாமல் தல ரசிகர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் நியூ இயருக்காவது படத்தின் புது அப்டேட் கிடைக்குமா என்ற ஆர்வத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் நேற்று சோஷியல் மீடியாவில் வலிமை பட போஸ்டரை டிரெண்டிங் ஆக்கினார். ஆனால் இன்று அதிகாலை போனி கபூர் வெளியிட்ட ஒரு டிவிட்டால் மீண்டும் தல ரசிகர்கள் கடுங்கோபத்திற்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
காரணம் தமிழ் வலிமை குறித்த அப்டேட்டிற்கு பதிலாக அவர் தெலுங்கு ரீமேக்கில் உருவாகிவரும் நேர்க்கொண்ட பார்வை குறித்த அப்டேட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதோடு அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் நேர்க்கொண்ட பார்வையின் தெலுங்கு ரீமேக்கில் வக்கீலாக மக்கள் வரவேற்பை பெற்ற பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையல் சாப் என்ற பெயரில் உருவாகி வரும் அப்படத்தின் புது அப்டேட்டை பவர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டே போனி கபூர் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். ஆனால் இந்த அப்டேட்டால் மகிழ்ச்சி அடையாத தல ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது வெளிவரும் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
And it's a wrap for @PawanKalyan on #VakeelSaab sets. We all had a BLAST working with the Power Star ??
— Boney Kapoor (@BoneyKapoor) December 29, 2020
The POWER will unleash very soon!#SriramVenu @i_nivethathomas @yoursanjali @AnanyaNagalla @SVC_official @BayViewProjOffl @BoneyKapoor @MusicThaman pic.twitter.com/M5uOArzIt3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments