'வலிமை' தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடும் டீசர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன்பின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் ஆனால் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் இயக்குனர் எச்.வினோத் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்கூட அஜீத்தின் மேனேஜர் ‘வலிமை’ படத்தின் அப்டேட் சரியான நேரத்தில் வெளிவரும் என்று தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அவர்கள் இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கிய ’பவுடர்’ என்ற திரைப்படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜீத் ரசிகர்கள் டென்ஷன் ஆகி உள்ளனர். தாங்கள் மாதக்கணக்கில் அப்டேட் கேட்டும் தராமல் இருக்கும் போனிகபூர், மற்ற படங்களின் அப்டேட்களை மட்டும் வெளியிட்டு கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்
இருப்பினும் விரைவில் அஜித் ரசிகர்களை சமாதானப்படுத்த போனிகபூர் ‘வலிமை’ படத்தின் அப்டேட்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
The Most Happening Visionary Producer @BoneyKapoor
— IndiaGlitz - Tamil (@igtamil) January 25, 2021
releases #Powder teaser on 26thjan#பவுடர் #PowderTamilfilm #AVijaySriGmakeup @vijaysrig @Vidya_actress @onlynikil#manobalam @catcharadya @catchtshantini #Aadhavan #RajapandiDop @onlygmedia pic.twitter.com/QTFk8kDPt6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments