'வலிமை' தயாரிப்பாளர் போனிகபூரா இவர்? 45 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் என்பதும் இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 45 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தனது புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணா நடித்த ’அனுரோத்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தான் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாகவும் அப்போது எடுக்கப்பட்ட மறக்க முடியாத புகைப்படம் என்றும் அந்த புகைப்படம் குறித்து அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.
45 வருடங்களுக்கு முன் போனிகபூர் மிகவும் ஒல்லியாக இருக்கும் இந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments