போனிகபூர் தயாரித்த சூப்பர்ஹிட் படங்கள்: அந்த வரிசையில் இணையுமா அஜித்தின் 'வலிமை?

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் போனிகபூர் தயாரித்த சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன என்பது குறித்த ரசிகரின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவில் என்னென்ன திரைப்படங்கள் உள்ளன என்பதை பார்ப்போம்.

கடந்த 1987ஆம் ஆண்டு அனில்கபூர், ஸ்ரீதேவி நடித்த ’மிஸ்டர் இந்தியா’ திரைப்படம் சுமார் 4 கோடி பட்ஜெட்டில் உருவாகி 10 கோடி வசூலை பெற்ற சூப்பர் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போனிகபூர் தயாரிப்பில் உருவான அடுத்த படம் ‘ஜூடாய்’. இந்த படம் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியானது என்பதும் அனில்கபூர், ஸ்ரீதேவி நடித்த இந்த படம் 6 கோடி பட்ஜெட்டில் உருவாகி 28 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போனி கபூர் தயாரித்த படம் ’புக்கர்’. அனில்கபூர், மாதுரி தீக்ஷித் நடித்த இந்த படம் கடந்த 2000 ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது/ மேலும் போனிகபூர் தயாரித்த மற்றொரு சூப்பர் ஹிட் படம் ’கம்பெனி’. மோகன்லால், மனிஷா கொய்ராலா நடித்த இந்த திரைப்படம் சுமார் 225 கோடி வசூல் செய்தது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் போனிகபூர் தயாரித்த ’நோ என்ட்ரி’ என்ற திரைப்படத்தில் சல்மான் கான், அனில் கபூர் நடித்து இருந்தனர் என்பதும் இந்தப் படம் ரூ.20 கோடியில் தயாராகி ரூ.75 கோடி வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மீண்டும் சல்மான்கான் நடித்த ’வான்டட்’ என்ற திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து இருந்தார் என்பதும் பிரபுதேவா இயக்கிய இந்தப் படம் பாலிவுட் திரையுலகின் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்ரீதேவி நடிப்பில் போனி கபூர் தயாரித்த சூப்பர் ஹிட் படம் ‘மாம்’. இந்த படமும் உலகெங்கும் சூப்பர் ஹிட்டானது என்பதும், இந்த படம் 37 கோடி ரூபாயில் மட்டுமே தயாரிக்கப்பட்டு 180 கோடி உலகம் முழுவதும் வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தற்போது ‘வலிமை’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். அவருடைய சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் ‘வலிமை’ படமும் நிச்சயம் சேரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.