பெங்களூரில் 'வலிமை' பிரி ரிலீஸ் நிகழ்ச்சி: அஜித் கலந்து கொள்வாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று இரவு பெங்களூரில் இந்த படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கடந்த இரண்டு வருடங்களாக அஜித் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே வந்த நிலையில் தற்போது தினமும் ‘வலிமை’ அப்டேட்டை போனிகபூர் அஜித் ரசிகர்களுக்கு திகட்டத் திகட்ட வழங்கி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் வரும் 24-ஆம் தேதி வியாழக்கிழமை ‘வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இன்று இரவு 7 மணிக்கு பெங்களூரில் ‘வலிமை’ திரைப்படத்தின் பிரிரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அஜித் தான் நடித்த திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நிலையில் விதிவிலக்காக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Bangalore, get ready for the amazing pre-release event of #Valimai today at 7 PM. See you all!??
— Boney Kapoor (@BoneyKapoor) February 21, 2022
Releasing in Hindi, Tamil, Telugu, and Kannada on 24th Feb 2022.#ValimaiPromo #ValimaiThePower #ValimaiFDFS #ValimaiFromFeb24#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl pic.twitter.com/YeS2HkJnhx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com