வெளிநாட்டில் அடுத்தகட்ட படப்பிடிப்பு: 'வலிமை' குறித்த புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Monday,March 09 2020]

அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மாறி மாறி நடைபெற்று வருவது தெரிந்ததே. சமீபத்தில் சென்னையில் மோட்டார் ரேஸ் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ நாடுகளில் நடைபெற இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பின்போது கார், மோட்டார் சைக்கிள் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படப்பிடிப்பிற்காக வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஸ்பெயின் செல்ல உள்ளதாகவும், ஸ்பெயினில் படப்பிடிப்பை முடித்த உடன் மொரோக்கோ செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வைரஸ் வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் வெளிநாட்டு படப்பிடிப்பபை கிட்டத்தட்ட அனைத்து படக்குழுவினரும் தவிர்த்து வரும் நிலையில் ’வலிமை’ படக்குழுவினர் இந்த பயணத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

’வலிமை’ திரைப்படத்தின் நாயகியாக ஹூமாகுரேஷி மற்றும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருவதாக கூறப்படினும், இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் கொரோனா நடனம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு அரசாங்கமும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

'மாஸ்டர்' ஆடியோ விழாவின் மாஸ் டிரைலர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது

சசிகலா நிலைமை ரஜினிக்கு வரக்கூடாது: தமிழருவி மணியன் பேச்சு

சசிகலாவுக்கு ஏற்பட்ட நிலைமை உங்களுக்கு வரக்கூடாது என்று ரஜினிக்கு வலியுறுத்தினேன் என தமிழருவி மணியன் கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'திரெளபதி' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

இயக்குனர் ஜி மோகன் இயக்கிய 'திரெளபதி' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பிரிவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பல அரசியல்வாதிகள்

மர்ம உறுப்பில் மறைத்து வைத்து கோகைன் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் பெண் கைது 

பொலிவியா சேர்ந்த பெண்ணொருவர் மர்ம உறுப்பில் மறைத்து வைத்து கோகைன் கடத்திய நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது