'வலிமை' படத்தில் அஜித்தின் இண்ட்ரோ சாங்: யுவனின் மாஸ் அறிவிப்பு!

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’வலிமை’. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்துள்ள இந்த படத்தில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளிலும் சேசிங் காட்சிகளும் உள்ளன என்பதும், ஆக்சன் பிரியர்களுக்கு விருந்தாக அமையும் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வலிமை’ படம் குறித்த அப்டேட்களை படக்குழுவினர் தரவில்லை என்றாலும் அவ்வப்போது இந்த படம் குறித்து கசிந்து வரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’வலிமை’ படத்தில் இடம்பெற்ற அஜித்தின் இன்ட்ரோ சாங் குறித்து இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி ’வலிமை’ படத்திற்காக நடிகர் அஜித்தின் இன்ட்ரோ சாங் தயாராகிவிட்டதாக யுவன்சங்கர்ராஜா அறிவிப்பு செய்துள்ளார். இது ஒரு சரியான மாஸ் சாங் என அவர் நெகழ்ச்சியுடன் கூறியிருப்பதை அடுத்து இந்த மாஸ் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More News

125 தொகுதிகளுடன் முன்னிலை… சர்வே முடிவுகளில் அசத்தும் அதிமுக!

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களில் அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும் என தனியார் சர்வே முடிவு ஒன்று தெரிவித்து இருக்கிறது

எஸ்.எஸ்.ராஜமெளலி-மகேஷ்பாபு படம் குறித்து ஆச்சரிய தகவல் அளித்த பிரபலம்!

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய பிரம்மாண்டமான படங்களை எடுத்த இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும்

டிடிவி தினகரனை நம்பிச் சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்-முதல்வர் எச்சரிக்கை!

பெங்களூரு சிறையில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவை அமமுக கட்சியினர் பல இடங்களில் மரியாதை செய்து வரவேற்றனர்.

டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடை பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 19 வயது வீராங்கனை… குவியும் பாராட்டு!

அசாம் மாநிலத்தின் சாருசஜாய் மைதானத்தில் 36 ஆவது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.