'வலிமை' படத்தின் ஸ்டண்ட் சீக்ரெட்டை கூறிய நாயகி ஹூமா குரேஷி!

’வலிமை’ திரைப்படத்தில் உள்ள ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட்டில் வெளியான ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' மற்றும் ’மிஷன் இம்பாசிபிள்’ படங்களுக்கு இணையானது என்று பாலிவுட் திரையுலக பிரபலம் ஒருவர் கூறியதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் ஸ்டண்ட் குறித்த சீக்ரெட்டை இந்த படத்தின் நாயகி ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆன நடிகை ஹூமா குரேஷி, ’வலிமை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனை கேரக்டர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வட இந்திய ஊடகத்திற்கு ’வலிமை’ படம் குறித்த பேட்டி அளித்த நடிகை ஹூமா குரோஷி, ’வலிமை’ படத்தில் தனது கேரக்டர் குறித்தும், அந்த படத்தின் கதை குறித்தும் எந்தவித தகவலும் சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்றும் ’அவுட் ஆஃப் த வேர்ல்ட்’ சண்டைக்காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்று உள்ளன என்ற ஒரு ரகசியத்தை மட்டும் சொல்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் சண்டைகள் தெறிக்க விட்ட நிலையில் தற்போது ஹூமாகுரேஷி சொன்ன சீக்ரெட் காரணமாக இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.