அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தா? ஃபர்ஸ்ட்லுக்குடன் மேலும் ஒரு ஆச்சரியம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவல்களின்படி ’வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமன்றி மோஷன் போஸ்டரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மோஷன் போஸ்டர் தற்போது தயாராகி விட்டதாகவும் அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது
அதுமட்டுமின்றி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.
We have a confirmed news that #Valimai motion poster is getting ready along with First look.
— LetsOTT GLOBAL (@LetsOTT) June 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments