அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தா? ஃபர்ஸ்ட்லுக்குடன் மேலும் ஒரு ஆச்சரியம்?

  • IndiaGlitz, [Thursday,July 01 2021]

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவல்களின்படி ’வலிமை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமன்றி மோஷன் போஸ்டரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மோஷன் போஸ்டர் தற்போது தயாராகி விட்டதாகவும் அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது

அதுமட்டுமின்றி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ’வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் இணையும் மிர்ச்சி சிவா-யோகிபாபு!

பிரபல நடிகர்களான மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு ஏற்கனவே 'கலகலப்பு' 'கலகலப்பு 2' மற்றும் 'சுமோ' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது முதல் இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது

'பீஸ்ட்' படப்பிடிப்பிற்காக சென்னை வந்தார் பூஜா ஹெக்டே: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'பீஸ்ட்'.

பிரபல நடிகர் நசிருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதி....!

பிரபல நடிகர் நசிருதீன் ஷா-க்கு திடீரென உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஜித்துடன் நடித்ததை 27 வருடங்கள் கழித்து நினைவுகூர்ந்த 'மெட்டி ஒலி' நடிகை!

தல அஜித்துடன் நடித்ததை 27 ஆண்டுகள் கழித்து தனது இன்ஸ்டாகிராமில் 'மெட்டி ஒலி' சீரியலில் நடித்த நடிகை நினைவுகூர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

4-ஆவது அலை வரக்கூடும்....! எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்...!

கொரோனாவின் நான்காம் அலை வரக்கூடும் என, போலந்தின் சுகாதாரத்துறை அ