அஜித்தின் வலிமை: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸாகும் முன்பே முடிந்ததா வியாபாரம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இன்னும் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சி மட்டும் படமாக்க வேண்டியுள்ளது என்றும், இந்த படப்பிடிப்பிற்காக விரைவில் ’வலிமை’ படக்குழுவினர் வெளிநாடு செல்ல போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை அனைத்து அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் முன்பே அதன் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவிலான திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை உட்பட கிட்டத்தட்ட அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டதாகவும், ஒரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் முன்பே கிட்டத்தட்ட அனைத்து வியாபாரங்களும் முடிவடைந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ள இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயே வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் யுவன்சங்கர் ராஜா இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Valimai all business deals including worldwide theatrical, satellite and digital rights sold before even the release of first look.
— LetsOTT GLOBAL (@LetsOTT) July 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments