close
Choose your channels

அஜித் கூறிய பொன்மொழி: 'வலிமை' நடிகரின் டுவிட் வைரல்

Saturday, November 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் கூறிய பொன்மொழி ஒன்றை ‘வலிமை’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் ராஜா அய்யப்பா. இவர் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் கூறிய ஒரு கருத்தை அவருடைய சம்மதத்துடன் பதிவு செய்வதாக கூறி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

"ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பணக்காரர் என்பது ஒரு தனிநபரின் பொருளாதார நிலையை வரையறுக்கிறது, அவர்களின் குணாதிசயங்களை அல்ல. நல்லவர்களும் கெட்டவர்களும் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறார்கள். எனவே ஒரு நபரின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு அவரது குணாதிசயங்களை மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். அஜித் கூறிய இந்த அர்த்தமுள்ள பொன்மொழியை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment