11 ஆண்டு காதலித்த காதலியை கரம்பிடித்த 'வலிமை' நடிகர்: வைரல் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் 11 ஆண்டு காலமாக தான் காதலித்த பெண்ணை கரம் பிடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தல அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், பொனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தில் வில்லனாக நடித்து வருபவர் கார்த்திகேயா என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் நடிகர் கார்த்திகேயா கடந்த 2010ஆம் ஆண்டு முதல் காதலித்து வரும் பெண்ணை தற்போது திருமணம் செய்யவிருப்பதாகவும், இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் முதன்முதலாக தனது காதலியை பார்த்த போது எடுத்த புகைப்படத்தையும், தற்போது நிச்சயதார்த்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த இரண்டு புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
11 ஆண்டு காதலித்த பெண்ணை கைப்பிடிக்க ‘வலிமை’ வலிமை நடிகர் கார்த்திகேயாவுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Feeling elated to announce my engagement with my best friend who now is my partner for life..
— Kartikeya (@ActorKartikeya) August 23, 2021
From 2010when i first met #Lohitha in nitwaranagal to now and many more such decades.. pic.twitter.com/xXYp7pcH4K
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments