'வலிமை' நடிகருக்கு திருமணம்: கேரள பெண்ணை கைப்பிடித்தார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் நடித்த நடிகருக்கு திருமணம் முடிந்ததை அடுத்து ரசிகர்கள் அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் 300 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த நடிகை கார்த்திகேயனின் அடியாட்களில் ஒருவராக நடித்தவர் துருவன். இவருக்கும் அஞ்சலி என்ற கேரள பெண்ணுக்கும் கேரளாவில் உள்ள பாலக்காடு என்ற பகுதியில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்களை நடிகர் துருவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் துருவன் - அஞ்சலி தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் துருவன் தற்போது பிருத்விராஜ் நடிப்பில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ஜன கண மன’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout