ஓவியாவுக்கு வையாபுரி திடீர் ஆதரவு: பிக்பாஸ் வீட்டில் திருப்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார் ஓவியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாருமே இல்லாததால் கடந்த சில நாட்களாக அவர் சோகமாகவே காணப்பட்டார். ஒரே ஆதரவாக இருந்த ஆரவ்வும் தற்போது ஓவியாவை தவிர்த்து வருவதால் ஓவியாவின் சோகம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த புரமோ வீடியோவில் ஆரவ்விடம் ஓவியா, 'என்மேல் உனக்கு காதல் இருக்கா, இல்லையா? அப்படின்னு டவுட் இருக்கு. நீ கிளியரா இருக்கா, இல்லையான்னு சொல்லிட்டின்னா நல்லது என்று கூற அதற்கு ஆரவ் 'எதுவுமே கிடையாது' என்று உறுதியாக கூறினார்.
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த ஓவியா, 'இனிமேல் என் வாழ்க்கையில் நீ இல்லை, என் பின்னாடி வராதே' என்று ஆத்திரமாக கூறிவிட்டு செல்கிறார். இந்த நிலையில் ஓவியாவிடம் வையாபுரி, 'நீ தைரியமா இரு, உன்கிட்ட நியாயம் இருக்கு, உனக்காக நான் எங்க வேண்டும் என்றாலும் பேசுவேன்' என்று கூறுகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே ஓவியா குறித்து நல்லவிதமாக பேசி வரும் வையாபுரி தற்போது நேரடியாக ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டதால் அவரை ஓவியா ஆர்மியினர் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். மேலும் ஓவியாவுக்கு இதுவரை முழுதாக 50 ஓட்டு போட்டவர்கள் கூட தற்போது அதில் 20 ஓட்டுக்களை வையாபுரிக்கு போட ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments