பிக்பாஸ் போட்டியாளர்களின் கவர்ச்சி உடைக்கு யார் காரணம்? வையாபுரி பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்துடன் நிறைவு பெறவிருக்கின்றது. அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். நேற்று சுஜா வெளியேறியதை அடுத்து இன்னும் சினேகன், கணேஷ், ஆரவ், பிந்து மற்றும் ஹரீஷ் ஆகியோர்களில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்
இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய வையாபுரி பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதுவுமே சொல்லிக் கொடுத்து நடப்பதல்ல. காலை எழுந்தது முதல் இரவு தூங்க போவது வரை அனைத்தும் உண்மையாக எதார்த்தமாக நடப்பவை' என்று கூறினார்.
மேலும் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் ஒருசிலரின் கவர்ச்சி உடைக்கும் பிக்பாஸுக்கும் சம்பந்தமில்லை. போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த உடைகளையே அணிந்தனர். மேலும் அவரவர் வீட்டில் எவ்வாறு இருந்தார்களோ அதேபோல்தான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தனர்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com