குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,November 14 2017]

இன்று நவம்பர் 14 குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்கால தூண்கள் என்பதால் அவர்களை அரசியல்வாதிகளும் பிரபலங்களும் போற்றியும் ஆசிர்வத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகமெங்கும் பிரபலமான நகைச்சுவை நடிகர் வையாபுரி பள்ளி குழந்தைகளுடன் இன்று 'குழந்தைகள் தினத்தை கொண்டாடினார்

திருவாரூரில் உள்ள 'நியூ பாரத் மேல்நிலை பள்ளி' 25வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட வையாபுரி அங்குள்ள குழந்தைகளோடு உரையாடினார். விழாவில் குழந்தைகள் நடிகர் வையாபுரியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பேசும் பேச சொல்லி கேட்டு மகிழ்ந்தனர். மேலும் அவர் பேசிய சினிமா வசனங்களையும் குழந்தைகள் விரும்பி கேட்டனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வையாபுரி சிறு குழந்தைகளின் விருப்பத்திற்குரிய நடிகராக மாறிவிட்டார் என்பதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டியுள்ளது. பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளை மகிழ வைத்த வையாபுரிக்கு பள்ளி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

More News

41 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த கவுதம்மேனனின் அடுத்த படம்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தையும் இயக்கி வருகிறார்.

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு அளித்த கெளரவம்

ஆந்திர மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி - சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோர் பெயர்களில் திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

ஜெயலலிதா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா? மலையாள பத்திரிகை செய்தியால் பரபரப்பு

தமிழக மக்கள் இதுவரை ஜெயலலிதாவை மட்டுமே 'தலைவி' என்று கூறி வந்தனர். அவருக்கு அடுத்து தற்போது நயன்தாராவை அவரது ரசிகர்கள் 'தலைவி' என்று கூற ஆரம்பித்துள்ளதாக மலையாள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாட்டு பாடியே மனைவியின் கோபத்தை போக்கிய கணவன்: சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்

கணவன் மீது மனைவிக்கு கோபம் ஏற்பட்டால் கணவர் பாட்டு பாடி மனைவியை சமாதானப்படுத்தும் காட்சி பல திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த காட்சி டெல்லியில் நிஜமாகவே நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்

நவம்பர் 14 என்றாலே அனைவருக்கும் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளும், குழந்தைகள் தினமும்தான் ஞாபகம் வரும். குழந்தை பருவம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பருவம்.