ஆரவ்வுக்கு வையாபுரி கூறிய சாட்டையடி அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் குடும்பத்தில் இருக்கும் பலர் நேரத்திற்கு ஒரு பேச்சு, நாளுக்கு ஒரு செய்கை என்று கிட்டத்தட்ட பச்சோந்தி போலவே நிறம் மாறி கொண்டே இருக்கின்றனர். காயத்ரி, ஜூலி, சமயம் கிடைக்கும் போதெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் சினேகன், கணேஷ், சக்தி என அனைவருமே, ஒருவர் இருக்கும்போது ஒரு பேச்சும், அதே நபர் இல்லாமல் இருக்கும்போது இன்னொரு பேச்சும் பேசி வருகின்றனர்.
உண்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஜூலியின் நோய் கிட்டத்தட்ட அனைவருக்கும் தொற்றுவியாதி போல் தொற்றிவிட்டது. இந்த நிலையில் வையாபுரி ஆரம்பத்தில் இருந்தே யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் நடுநிலையாக பேசி அவருடைய மரியாதையை காப்பாற்றி வருகிறார்.
ஓவியாவை திடீரென வெறுக்கும் ஆரவ்வுக்கு நேற்று அவர் சாட்டையடி அறிவுரை ஒன்றை கூறினார். ஒரு பெண்ணுடன் பழகிவிட்டு பிடிக்காவிட்டால் ஒரே நாளில் அவரை வெறுப்பது மிகப்பெரிய தவறு. கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு புரிய வைத்து விலகியிருக்கலாம். அதுமட்டுமின்றி ஒரு வீட்டில் உள்ள நான்கு பெண்களில் ஒரு பெண்ணை மட்டும் வெறுத்து ஒதுக்கிவிட்டு மற்ற மூன்று பெண்களிடம் அன்பாக பேசுவது யாராக இருந்தாலும் கோபத்தை வரவழைக்கும். ஓவியா நிலையில் நானாக இருந்தாலும் கண்டிப்பாக கோபப்பட்டிருப்பேன்' என்று மற்றவர்களை போல புறம் கூறாமல் ஆரவ்விடம் நேருக்கு நேர் வையாபுரி கூறினார்.
வையாபுரியின் இந்த அறிவுரையை 'உண்மை' என்று ஆரவ் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com