பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறும் வைஷ்ணவி: ஆனால் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Sunday,July 29 2018]

பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியேறும் நபர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மனதிலும் எழுந்துள்ளது.

பொன்னம்பலம், மகத், யாஷிகா, மும்தாஜ் மற்றும் வைஷ்னவி எவிக்சன் பட்டியலில் இருப்பதால் இவர்களில் ஒருவர் இன்று வெளியேற போகிறார்.

இதுகுறித்து சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் 'நான் மக்களிடம் ரெகுலர் கஸ்டமர் ஆகிவிட்டதாக பொன்னம்பலமும், நான் வெளியே போக மாட்டேன் என்ற நம்பிக்கை இருப்பதாக மகத்தும், இந்த வீட்டில் தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகவும், வெளியேற விரும்பவில்லை என்று யாஷிகாவும் கூறுகின்றனர். அதன்பின்னர் மும்தாஜ் மற்றும் வைஷ்ணவியை மட்டும் காட்டி ஒருவர் வெளியேற்றப்பட போவதாக கமல் கூறுவதால் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் வைஷ்ணவி வெளியேற்றப்படுவதாகவும், ஆனால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவை ஒரு சீக்ரெட் அறையில் தங்க வைத்தது போல் வைஷ்ணவியையும் ஒரு சீக்ரெட் அறையில் தங்க வைக்கப்போவதாகவும் ஒருசில நாட்கள் கழித்து மீண்டும் வைஷ்ணவி பிக்பாஸ் இல்லத்திற்குள் செல்வார் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர். இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நேரம் வரும்போது அரசியலில் குதிப்பேன்: ஜெயம் ரவி பட நாயகி பேட்டி

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல நடிகர்களும், குஷ்பு போன்ற நடிகைகளும் அரசியலில் உள்ளனர். இந்த நிலையில் இன்னொரு நடிகை விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக பேட்டியளித்துள்ளார்.

கருணாநிதியை நேரில் சந்திக்க முடியவில்லை: நடிகர் பிரபு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்கோளாறு காரணமாக நேற்றிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்: வடசென்னை டீசர் விமர்சனம்

நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடித்துள்ள 'வடசென்னை' திரைப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் கமல் பட நாயகி: புதிய போட்டியாளரா?

பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்களில் ஒருவர் கூட பார்வையாளர்களை கவரவில்லை என்பதால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் புதிய அறிமுகங்கள் இருக்கும்

சூர்யாவின் 38வது படத்தின் பணியும் ஆரம்பம்

சூர்யா நடித்து வரும் 36வது படமான 'என்.ஜி.கே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. செல்வராகவன் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.