சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி: கீழடி குறித்து வைரமுத்து

  • IndiaGlitz, [Saturday,September 21 2019]

கல்தோன்றி மண் தோன்றும் காலத்திற்கு முன்பே தோன்றியது தமிழ் நாகரீகம் என நமது முன்னோர்கள் கூறி வந்தாலும், வரலாற்று ஆய்வாளர்களின் குறிப்புப்படி சிந்து சமவெளி நாகரீகமே உலகின் மூத்த நாகரீகம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ள தகவல்கள், பொருட்கள் ஆகியவை ஆய்வுக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவின்படி இந்தியாவின் வரலாறே மாற்றி அமைக்கும் வகையில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முந்தையது தமிழ் நாகரீகம் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி, தமிழ்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி. மேலும் ஊடகங்களின் ஒளி வேண்டும்; மத்திய அரசின் துணை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகிற்கே மூத்த மொழியாக இருக்கும் தமிழ் மொழியை இந்தியாவின் பொதுமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற குரல் சமூக வலைத்தளங்களில் ஓங்கி ஒலித்து வருகின்றது.