காற்று வெளியிடை: வைரமுத்து வார்த்தைகளால் விளையாடிய 'வான்' பாடல் வரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் 'அழகியே' பாடல் சமீபத்தில் வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இன்னொரு பாடலான 'வான்' என்று தொடங்கும் பாடலின் வரிகளை கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பாடல் குறித்தும், ஏ.ஆர்.ரஹ்மானுடன் 25 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியது குறித்தும் அவர் கூறியதாவது:
மணிரத்னம் – வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் என்ற எங்கள் கூட்டணி
கால் நூற்றாண்டைத் தொட்டிருக்கிறது. திரும்பிப் பார்க்கும்போது திகைப்பாக இருக்கிறது.
மதித்தல் – புரிதல் – அன்பு செலுத்தல் - கலையை முன்னிட்டு மட்டும் கருத்துவாதம் நிகழ்த்தல் என்ற குணங்களால் பணியாற்றுகிறோம். எங்களால் இயன்ற அளவுக்குத் தமிழ்ச் சமூகத்தை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறோம். தமிழர்களின் வாழ்த்துக்கள் இன்னும் எங்களை வளரவைக்கும் என்று நம்புகிறோம்.
காற்று வெளியிடை எங்கள் கூட்டணியின் அடுத்த படைப்பு. கதாநாயகன் விமானம் ஓட்டியாய் இருப்பதனால் வான் என்ற சொல்லை வைத்துக் காதலில் விளையாடமுடியுமா என்று இயக்குநர் கேட்டார். முடிந்த அளவு முயன்றிருக்கிறேன். வாசிக்கவும் யோசிக்கவும் வரிகளைத் தருகிறேன். கானத்திற்காகச் சில நாட்கள் காத்திருக்க மாட்டீர்களா? நன்றி.
இனி வைரமுத்து வார்த்தைகளால் விளையாடிய 'வான்' பாடலின் வரிகளை பார்ப்போமா...
வான்
வருவான்
தொடுவான்
மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்
கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
*
என்னோடி ருந்தால்
எவளோ நினைவான்
அவளோடி ருந்தால்
எனையே நினைவான்
என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்
கண்கள் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்
கண்கள் திறந்தால்
கணத்தில் கரைவான்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com