படையப்பா எழுந்து வா.. பாட்ஷாபோல் நடந்து வா: ரஜினியை வாழ்த்திய பிரபலம்!

படையப்பா எழுந்து வா, பாட்ஷா போல் நடந்து வா என ரஜினியின் நெருங்கிய நண்பர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை எழுதி உள்ளது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும், அவருக்கு இரத்தநாள திசுக்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ரஜினி விரைவில் நலம் காண வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து கவிதைகள் அவர் கூறியிருப்பதாவது:

காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.

நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.

உத்தமக் கலைஞனே

காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா

படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா

வாழ்த்துகிறேன்.