பகுத்தறிவுக்குப் பிள்ளை பிறந்தநாள்....! கலைஞருக்கு வைரம் வாழ்த்து மடல்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின், 98-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று, திமுக கட்சித்தலைவர்கள், தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரின் பெருமைகளை கூறி, வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு, கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,
"ஜூன் 3
கலைஞர் பிறந்தநாள்
தமிழுக்கு
ஏடு திறந்தநாள்
தமிழர்க்குச்
சூடு பிறந்தநாள்
பகுத்தறிவுக்குப்
பிள்ளை பிறந்தநாள்
பழைமை லோகம்
தள்ளிக் களைந்தநாள்
மேடை மொழிக்கு
மீசை முளைத்தநாள்
வெள்ளித் திரையில்
வீரம் விளைத்தநாள்
வள்ளுவ அய்யனை
வையம் அறிந்தநாள்
வைரமுத்துவின்
ஆசான் பிறந்தநாள்" என்ற அழகான கவிதை ஒன்றை கூறியுள்ளார்.
"கலைஞர் நினைவிடத்தில்
கோபாலபுரத்தில்
சி.ஐ.டி காலனியில்
கலைஞருக்குத்
தமிழ் வணக்கம்
செலுத்தி வந்தேன்
#HBDKalaingar98 " என்றும் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 3
— வைரமுத்து (@Vairamuthu) June 3, 2021
கலைஞர் பிறந்தநாள்
தமிழுக்கு
ஏடு திறந்தநாள்
தமிழர்க்குச்
சூடு பிறந்தநாள்
பகுத்தறிவுக்குப்
பிள்ளை பிறந்தநாள்
பழைமை லோகம்
தள்ளிக் களைந்தநாள்
மேடை மொழிக்கு
மீசை முளைத்தநாள்
வெள்ளித் திரையில்
வீரம் விளைத்தநாள்
வள்ளுவ அய்யனை
வையம் அறிந்தநாள்
வைரமுத்துவின்
ஆசான் பிறந்தநாள் pic.twitter.com/SHbprLQ42E
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments