அந்த நிலாவத்தான் நாம கையில புடிச்சோம்.. தனது பாடலை வைத்தே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வைரமுத்து வாழ்த்து..!

  • IndiaGlitz, [Thursday,August 24 2023]

’அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ என்ற பாடலை கவியரசு வைரமுத்து, சிவாஜி கணேசன் நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’முதல் மரியாதை’ என்ற படத்திற்காக எழுதினார்.

இந்த பாடலின் வரிகளை வைத்து தற்போது அவர் சந்திராயன் 3 திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கவிதை வடிவில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

பூமிக்கும் நிலவுக்கும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது
இந்தியா

ரஷ்யா அமெரிக்கா சீனா
என்ற வரிசையில்
இனி இந்தியாவை எழுதாமல்
கடக்க முடியாது

இஸ்ரோ விஞ்ஞானிகளின்
கைகளைத் தொட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்

இது மானுட வெற்றி

அந்த நிலாவத்தான்
நாம கையில புடிச்சோம்
இந்த லோகத்துக்காக

இது போதாது
நிலா வெறும் துணைக்கோள்
நாம் வெற்றி பெற - ஒரு
விண்ணுலகமே இருக்கிறது.

More News

உலகமே கொண்டாடும் 'சந்திராயன் 3' வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கமல், ரஜினி வாழ்த்து..!

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 என்ற விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது என்பதும்  விக்ரம் லேண்டரில் இருந்து  பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவை ஆய்வு செய்து வருகிறது என்று

போலீஸ் மேலேயே கைவச்சிட்டியா... சுரேஷ் காமாட்சியின் 'நூடுல்ஸ்' டிரைலர்..!

சிம்புவின் 'மாநாடு' உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான அடுத்த திரைப்படம் 'நூடுல்ஸ்'. இந்த படம்  வரும் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ்

தப்பு யார் செஞ்சிருந்தாலும் அவங்க தப்பானவங்க தான்.. விமலின் 'துடிக்கும் கரங்கள்' டிரைலர்..!

விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா: இஸ்ரோவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நிலவின் தென் துருவதற்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் சந்திராயன் 3 என்ற விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

மீண்டும் ஷங்கர் - விக்ரம் படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா நடிப்பில் உருவான 'அந்நியன்' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில்