"காதலன் வணங்குகிறேன்"....! கண்ணதாசனுக்கு வாழ்த்து கூறிய வைரம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கவிஞர் கண்ணதாசனின் 95-ஆவது பிறந்தநாளுக்கு, பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் வாழ்த்து ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய யதார்த்தமான பாடல் வரிகளாலும், தத்துவ பாடல்களாலும் ரசிகர்களின் மனதை வென்றெடுத்தவர் தான் கவிஞர் கண்ணதாசன். காலம் கடந்தும் இன்றைய காலத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்று சொன்னால் அது உண்மைதான். கவிஞர், பாடலாசிரியர், நடிகர், வசனகர்த்தா, எடிட்டர் என பன்முகத்தன்மை கொண்ட, மாபெரும் கலைஞர் தான் கண்ணதாசன். சிறுகூடல்பட்டியில் பிறந்து தனது வரிகளால், மக்கள் மனதில் ஆட்சி கொண்டிருக்கும் தலைசிறந்த தமிழ்க்கவிஞர். தமிழ் திரையுலகில் 5000 அழகான பாடல்களை எழுதி, ரசிகர்களை தன்வசியப்படுத்தியவர். 232 புத்தகங்களையும், 6000- த்திற்கும் அதிகமான கவிதைகளையும் புனைந்துள்ளார்.
இன்று கவியரசரின் பிறந்தநாள் என்பதால், ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, கண்ணதாசன் பற்றி கூறியிருப்பதாவது,
" உன் பிறந்தநாளில் காதலன் வணங்குகிறேன் கவியரசே!
பாட்டு மொழிக்கு உயரமும் ஒய்யாரமும் தந்தவனே!
உன் வரிகளில் வாழ்கிறாய்....
நீ உன் வரிகளோடு வாழ்கிறோம் நாங்கள்
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை -
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.."
என்ற அழகான வரிகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உன் பிறந்தநாளில்
— வைரமுத்து (@Vairamuthu) June 24, 2021
காதலன் வணங்குகிறேன்
கவியரசே!
பாட்டு மொழிக்கு
உயரமும் ஒய்யாரமும் தந்தவனே!
உன் வரிகளில்
வாழ்கிறாய் நீ
உன் வரிகளோடு
வாழ்கிறோம் நாங்கள்
நீ நிரந்தரமானவன்
அழிவதில்லை - எந்த
நிலையிலும் உனக்கு
மரணமில்லை#Kannadasan pic.twitter.com/K0C9kijz3j
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com