அடிமடியில் கை வைக்க வேண்டாம்: அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் 20 லட்சம் கோடிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தனர். அதில் ஒன்று விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக நேரடியாக வங்கிகளில் பணம் செலுத்தும் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.அவர் கூறியதாவது:
உரிமை மின்சாரத்தை நீக்கி
உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.
உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...
அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்.
உரிமை மின்சாரத்தை நீக்கி
— வைரமுத்து (@Vairamuthu) May 19, 2020
உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.
உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...
அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments