நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல: வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதன் பரபரப்பு நீங்காத நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரியலூரை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு மாணவர்களின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அதிகாலை மதுரையில் ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்
அடுத்தடுத்து மூன்று மாணவ மாணவிகள் தமிழகத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதை அடுத்து நீட் தேர்வுக்கு எதிரான கோஷங்கள் வலுத்து வருகின்றது. இந்த நிலையில் பலத்த எதிர்ப்பையும் மீறி நாளை தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ மாணவிகள் எந்த காரணத்தை முன்னிட்டும் பயம் கொள்ளவேண்டாம் என்றும் தற்கொலை ஒரு தீர்வும் அல்ல என்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஓ!
மாணவ மகன்களே! மகள்களே!
நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.
பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.
அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.
நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.
நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.
ஓ!
— வைரமுத்து (@Vairamuthu) September 12, 2020
மாணவ மகன்களே! மகள்களே!
நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.
பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.
அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.
நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.
நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.#NEET #BanNEET
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com