கமல், இளையராஜா, பாராதிராஜாவுக்கும் பால்கே விருது: பிரபலத்தின் வேண்டுகோள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினிகாந்துக்கு நெருக்கமான ஒரு சிலர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் ஒரு குறையாக நெட்டிசன்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா ஆகியோர்களும் தாதாசாகிப் பால்கே விருதுக்கு தகுதியானவர்கள் என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார். இதுகுறித்து வைரமுத்துவின் டுவிட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்.

More News

வண்ணம் கொண்ட வெண்ணிலவு… வாணிபோஜனின் அழகியப் புகைப்படங்கள்!

சின்னத்திரை நட்சத்திரமாக ஜொலித்து தற்போது சினிமாவில் நுழைந்திருக்கும்

டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க… சில எளிய டிப்ஸ்!

உடல்எடையை குறைக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு கனவு.

விருதுபெற்ற அனைவரையும் வாழ்த்திய இயக்குனர் இமயம்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட கலைஞர்கள் ஆகிய அனைவருக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது சமூக வலைதளத்தில்

உங்களின் வாழ்த்து என்னை மிகவும் நெகிழவைத்தது: கலைப்புலி தாணுவின் பதிவு!

உங்களின் வாழ்த்த என்னை நெகிழ வைத்து விட்டது என கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்த்து குறித்து பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சரவெடி சத்தம் அகில உலகமெங்கும் ஒலிக்க: 'அண்ணாத்த' டிரைலர் ரிலீஸ் தேதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'அண்ணாத்த' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு