நல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களளின் புரமோஷன்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து விரைவில் திரையரங்குகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவதாகவும் விரைவில் தமிழக முதல்வர் திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் தற்போது திரைப்படங்களின் புரமோஷன்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன. அந்தவகையில் நேற்று விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கிய ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் சமூக வளைதளத்தை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பலர் பாராட்டி வந்தனர். நடிகர் சூரி நேற்று தனது பாணியில் படத்தின் குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது கவியரசு வைரமுத்து அவர்கள் இந்த படத்தின் டீசரை பார்த்து கவிதை வடிவில் பாராட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நல்ல கலைகளெல்லாம்
மனிதகுலத்தின் வலியிலிருந்து வழிந்தவை.
இந்தப் படம் இன்னொரு வலி.
இது வெற்றிபெறக் கூடும் என்று
என் நம்பிக்கை நரம்பு துடிக்கிறது.
பார்ப்போம்..
வைரமுத்துவின் இந்த பாராட்டுக்கு ’க/பெ ரணசிங்கம்’ படக்குழுவினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
நல்ல கலைகளெல்லாம்
— வைரமுத்து (@Vairamuthu) May 24, 2020
மனிதகுலத்தின் வலியிலிருந்து வழிந்தவை.
இந்தப் படம் இன்னொரு வலி.
இது வெற்றிபெறக் கூடும் என்று
என் நம்பிக்கை நரம்பு துடிக்கிறது.
பார்ப்போம்...@VijaySethuOffl @kjr_studios
@aishu_dil @pkvirumandi1 @GhibranOfficial@RangarajPandeyR https://t.co/HO5QnZaG94
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com