மக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று திரையுலக பிரபலங்கள் பலரும் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் என்பதும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியது என்பதும் தெரிந்ததே
மேலும் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. ???? #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை
இந்த நிலையில் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கை குறித்து கவியரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
நகலெடுக்க முடியாத
உடல்மொழி
சூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்
45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்
இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்
இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு
நகலெடுக்க முடியாத
— வைரமுத்து (@Vairamuthu) August 10, 2020
உடல்மொழி
சூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்
45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்
இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்
இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!@rajinikanth
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com