என் பாட்டு வரியை எனக்கே மாற்றி அனுப்புகிறார்கள்: பெட்ரோல் விலையுயர்வு குறித்து வைரமுத்து!
- IndiaGlitz, [Wednesday,February 17 2021]
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ இன்னும் ஒரு சில நாட்களில் தொட்டுவிடும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் பதிவாகி வரும் நிலையில் வைரமுத்துவின் பாடலை வைத்து பெட்ரோல் விலை உயர்வு குறித்த கவிதை எழுதி அவருக்கே நெட்டிசன்கள் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
என் பாட்டு வரியை மாற்றி
எனக்கே அனுப்புகிறார்கள் :
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்
வைரமுத்துவின் இந்த ட்விட்டிற்கு நெட்டிசன்கள் அவருடைய வேறு சில பாடல்களை மாற்றி பெட்ரோல் விலையுயர்வு குறித்து காமெடியாக கமெண்ட் அளித்துள்ளதும் பெரும் காமெடியாக உள்ளது. ஒரு சில கமெண்ட்ஸ்கள் இதோ:
'பசி எடுத்தால் சொல்லி அனுப்பு;
கேஸ் இருந்தால் சமைக்கிறேன்
உசுரே போகுது உசுரே போகுது
பெட்ரோல் விலைய பார்க்கையிலே
உன் கண்ணுக்கு அரை லிட்டர் பெட்ரோல் தாரேண்டி
உன் நெஞ்சுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் தாரேண்டி
சற்றே நிமிர்ந்தேன்....
தலைசுற்றிப் போனேன்....
ஆஹா அவனே கொள்ளையனடி
என் பாட்டு வரியை மாற்றி
— வைரமுத்து (@Vairamuthu) February 17, 2021
எனக்கே அனுப்புகிறார்கள் :
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’#PetrolDieselPriceHike