உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது: காட்டுத்தீ குறித்து கவிஞர் வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற கல்லூரி மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுமார் 40 பேர் வரை காட்டுத்தீயில் சிக்கி கொண்ட நிலையில் அவர்களை மீட்க இந்திய விமானப்படை உள்ளிட்டோர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த தீவிபத்தில் பலியான ஒன்பது பேர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் இந்த விபத்து குறித்து ஒரு பதிவை செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.
“சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.
இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments