உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது: காட்டுத்தீ குறித்து கவிஞர் வைரமுத்து

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற கல்லூரி மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுமார் 40 பேர் வரை காட்டுத்தீயில் சிக்கி கொண்ட நிலையில் அவர்களை மீட்க இந்திய விமானப்படை உள்ளிட்டோர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தீவிபத்தில் பலியான ஒன்பது பேர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் இந்த விபத்து குறித்து ஒரு பதிவை செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.

“சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.

இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்.

More News

குரங்கணியை டிரெக்கிங் ஆர்வலர்கள் தேர்வு செய்வது ஏன்?

தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் தான் இந்த குரங்கணி ஹில்ஸ்.

காட்டுத்தீயில் சிக்கி கருகிப்போன 100 நாட்களே ஆன புதுமண தம்பதி

தேனி குரங்கணி காட்டுத்தீயில் டிரெக்கிங் சென்ற மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டதை அடுத்து அவர்களை உயிருடன் மீட்கும்பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இரவோடு இரவாக மூடப்பட்ட டிரெக்கிங் நிறுவனம்? நிறுவனர் தலைமறைவு?

நேற்று தேனி அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை ஒருபுறம் மீட்கும் பணியில் இந்திய விமானப்படையும், தீயணைப்பு துறையினர்களும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்?

சீயான் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கி வரும் 'வர்மா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

மனதைப் பிழியும் சோகம்: காட்டுத்தீ விபத்து குறித்து கமல்

தேனி அருகேயுள்ள மலைப்பகுதியான குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, கமாண்டோ படை, தீயணைப்பு படை மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.