இத்தனைபேர் இருக்க எனக்கென்ன மனக்கவலை...? வைரமுத்து டுவீட்
- IndiaGlitz, [Tuesday,December 31 2019]
சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்று கவியரசு வைரமுத்து அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக அறிவித்தது. இதுகுறித்து வெளியான அழைப்பிதழில் வைரமுத்து அவர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் டாக்டர் பட்டத்தை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த விழா ரத்து செய்யப்பட்டது.
வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய மீடூ புகார் மற்றும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்து ஆகியவை காரணமாக மத்திய அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இந்த பட்டமளிப்பு விழாவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதனை அடுத்து தற்போது வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி.
— வைரமுத்து (@vairamuthu) December 31, 2019
இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?