தடுப்பூசி போட்டும் வேதியியல் மாற்றங்களை உணர முடியவில்லை: வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் முதல் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் போடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்களும், பொதுமக்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் திரையுலக பிரபலங்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இந்த நிலையில் சற்று முன் கவியரசு வைரமுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அதனால் தனது உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களை உணர முடியவில்லை என்றாலும் உளவியல் பாதுகாப்பை தன்னால் மறைக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நேற்று...
கொரோனா தடுப்பூசி இட்டுக்கொண்டேன்.
அதனால் உடலில் நிகழும்
வேதியியல் மாற்றங்களை
என்னால் உணர முடியவில்லை.
ஆனால்,
அது நல்கும் உளவியல் பாதுகாப்பை
என்னால் மறைக்க முடியவில்லை.
ஆகவே...
மாண்புமிகு மக்களே!
நீங்களும்...
நேற்று...
— வைரமுத்து (@Vairamuthu) March 7, 2021
கொரோனா தடுப்பூசி இட்டுக்கொண்டேன்.
அதனால் உடலில் நிகழும்
வேதியியல் மாற்றங்களை
என்னால் உணர முடியவில்லை.
ஆனால்,
அது நல்கும் உளவியல் பாதுகாப்பை
என்னால் மறைக்க முடியவில்லை.
ஆகவே...
மாண்புமிகு மக்களே!
நீங்களும்...#CoronaVaccine pic.twitter.com/8RjR69U2mz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments