கொரோனாவை குணமாக்கும் கருப்புத்தங்கம்: வைரமுத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நேற்றும் கூட தமிழகத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனாவை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தடுப்பூசியும் கண்டுபிடிக்காத நிலையில் லட்சக்கணக்கான பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
குறிப்பாக நமது இந்திய கலாச்சார உணவுகள் இயற்கையிலேயே கொரோனாவுக்கு எதிராக தானாகவே வேலை செய்கிறது என்று நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக மிளகு, மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்றும் எனவே மிளகு சம்பந்தப்பட்ட உணவை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சித்த வைத்தியர்கள் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மேற்குலகம் எதைத்தேடி இந்தியாவின் மேற்குக்கரையில் இறங்கியதோ -
அதை – அந்த மிளகை
எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.
மென்று, சாறுகுடித்து,
விழுங்கிவிடுங்கள்.
கொரோனாவின் எதிர்ப்பூட்டிகளுள்
ஒன்றாக நான் மிளகை நம்புகிறேன்;
அது கறுப்புத் தங்கம்.
மேற்குலகம் எதைத்தேடி இந்தியாவின் மேற்குக்கரையில் இறங்கியதோ -
— வைரமுத்து (@Vairamuthu) September 12, 2020
அதை – அந்த மிளகை
எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.
மென்று, சாறுகுடித்து,
விழுங்கிவிடுங்கள்.
கொரோனாவின் எதிர்ப்பூட்டிகளுள்
ஒன்றாக நான் மிளகை நம்புகிறேன்;
அது கறுப்புத் தங்கம்.#கொரோனா #coronavirus
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments