கொரோனா நச்சுயிரி மனித முயற்சியா? இயற்கை நிகழ்ச்சியா? வைரமுத்து 

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் ஒரு பக்கம் மிகவும் சீரியசாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த கொரோனா வைரஸை சீனா செயற்கையாக உருவாக்கி உள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் உலக சுகாதார மையம் கொரோனா செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ் இல்லை என்றும் இயற்கையாக உருவானது என்றும் கூறுகின்றனர்

இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிப்பதில் இன்னொரு பக்கம் தீவிர முயற்சிகளை மருத்துவர்கள், மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி மற்றும் குணப்படுத்தும் மருந்துகள் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியதா? அல்லது செயற்கையாக தோன்றியதா? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை விட உலக நாடுகள் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தான் தீவிர முன்னுரிமை தரவேண்டும் என்று கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கவிதை வடிவில் இதுகுறித்து கூறியிருப்பதாவது

கொரோனா நச்சுயிரி
மனித முயற்சியா இயற்கை நிகழ்ச்சியா
என்பதில் கருத்து வேறுபாடுண்டு.
ஆனால், மருந்து கண்டறிதல்
மனித முயற்சிதான் என்பதில் மாறுபாடில்லை.
உலக நாடுகள் முன்னதைவிடப் பின்னதற்கே
முன்னுரிமை தரவேண்டுமென்பது
பேருலகின் பெருவிருப்பம்