பூக்காரிக்கு பொருள் கொடுத்தேன்...! மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கவிஞர்...!
- IndiaGlitz, [Tuesday,June 15 2021]
இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் பலரும் தங்கள் உறவுகளை இழந்து வாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தினக்கூலிகள் பலரும் பொருளாதார ரீதியாக ஏராளமான துன்பவங்களை அனுபவித்து வருகிறார்கள். அந்தவகையில் சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பலரும் பொதுமக்களுக்கு நிதி உதவியும், பொருள் உதவியும், உணவும் தந்து உதவி வருகிறார்கள்.
ஊரடங்கில் பூ விற்பவர்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் பூ விற்கும் பெண்கள் சிலருக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் பொருட்கள் கொடுத்து உதவியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
'ஊரடங்கில்
பூவும் வாழ்வும் வாடிப்போன
பூக்காரிகள் சிலருக்குப்
பொருள் கொஞ்சம் கொடுத்தேன்
பண்புடையீர்!
உங்களைச்
சூழ்ந்திருக்கும் சமூகத்தை
ஆழ்ந்து பாருங்கள்
அற்ற வயிறும்
இற்ற உயிரும்
எத்துணையோ?
சற்றே உதவுங்கள்
சிற்றுதவிக்கும் செழும்பயனுண்டு
சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு
என பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கில்
— வைரமுத்து (@Vairamuthu) June 15, 2021
பூவும் வாழ்வும் வாடிப்போன
பூக்காரிகள் சிலருக்குப்
பொருள் கொஞ்சம் கொடுத்தேன்
பண்புடையீர்!
உங்களைச்
சூழ்ந்திருக்கும் சமூகத்தை
ஆழ்ந்து பாருங்கள்
அற்ற வயிறும்
இற்ற உயிரும்
எத்துணையோ?
சற்றே உதவுங்கள்
சிற்றுதவிக்கும் செழும்பயனுண்டு
சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு