உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து
- IndiaGlitz, [Sunday,July 26 2020]
சமீபத்தில் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஆஸ்கர் விருதுக்கு பிறகு இந்தி படங்களில் அதிகம் பணியாற்றவில்லை என்றும், இந்தியில் எனக்கு வரும் வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்றும் கூறியுள்ளார். மேலும் பாலிவுட்டில் நான் எந்தவொரு நல்ல படத்திற்கும் இசையமைக்க மாட்டேன் என்று கூறியது இல்லை என்றும், ஒருசிலர் எனக்கு எதிரான சில விஷயங்களை பரப்பியதால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளே பாலிவுட்டில் நான் அதிகம் பணியாற்ற இயலாமல் போனதற்கான காரணம்’ என்றும் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே தனக்கு வந்த வாய்ப்புகளை பறித்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சுஷாந்திசிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கவியரசு வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
அன்பு ரகுமான்!
@arrahman
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை
இந்த கவிதையில் வைரமுத்து ‘மான்’ என்று கூறியிருப்பதால் ‘மான்’ குறித்த வழக்கில் சிக்கிய ஒரு முக்கிய பாலிவுட் நடிகரை வைரமுத்து குறிப்பிட்டுள்ளாரோ? என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
அன்பு ரகுமான்! @arrahman
— வைரமுத்து (@Vairamuthu) July 26, 2020
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை.