அணுவை விடவும் சிறியது, அணுகுண்டை போல் கொடியது: வைரமுத்துவின் கொரோனா பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார். பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இசையமைத்து பாடிய இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்
கரோனா கரோனா கரோனா
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது
சத்தமில்லாமல் நுழைவது
யுத்தமில்லாமல் அழிப்பது
கரோனா கரோனா கரோனா
தொடுதல் வேண்டாம்,
தனிமை கொள்வோம்
தூய்மை என்பதை மதமாய் செய்வோம்
கொஞ்சம் அச்சம் நிறைய அறிவு
இரண்டும் கொள்வோம்
இதையும் வெல்வோம்
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
நாளை மீள்வாய் தாயகமே
நாளைய உலகின் நாயகமே
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
நாட்டு மக்களுக்கு ஒரு
— வைரமுத்து (@vairamuthu) March 27, 2020
பாட்டு நம்பிக்கை.
இசையமைத்துப் பாடிய
எஸ்.பி.பி நன்றிக்குரியவர்.#SPBalasubramaniam #SPB #CoronaLockdown #Coronaindia #coronatamilnadu https://t.co/NBWGIK7SWc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments