இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்: வைரமுத்து

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் திரைப்படங்கள் பிராந்திய மொழி திரைப்படங்களில் ஒன்றாக கருதப்பட்ட நிலையில் தற்போது பல தமிழ் திரைப்படங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன என்பதும் சர்வதேச விருதுகளையும் பல தமிழ் திரைப்படங்கள் குவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ’என்றாவது ஒருநாள்’ க/பெ ரணசிங்கம் மற்றும் ‘சியான்கள்’ ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருதுகளை பெற்று தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமையை சேர்த்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

'என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’,
'சீயான்கள்’ - ஆகிய திரைப்படங்கள்
சர்வதேச விருது கொண்டது
பெருமிதம் தருகிறது.

முதலிரு படங்களுக்கு
நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது
பரவசம் தருகிறது.

விரைக தமிழர்களே!
இனி
அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்

இந்த நிலையில் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் சர்வதேச விருதை பெற்றுள்ளதை அடுத்து படக்குழுவினர் அந்த படத்தில் சிறப்பாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை: கிரிக்கெட் வீரரும் இணைந்தார்!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இருக்கும் நிலையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நடிகர்-நடிகைகள் முக்கிய அரசியல் கட்சிகளில் இணைந்து வருவதை

சிம்பு-கவுதம் மேனன் படத்தின் கவிதைத்தனமான டைட்டில்!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கவிருக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில்லுக் போஸ்டர்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் முதல் பாகம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில்

களிமண் பிட்சா? இந்திய வீரர்களின் அசராத பந்து வீச்சால் நடந்த மேஜிக்!

இங்கிலாந்துக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் தற்போது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சசிகலாவை சந்தித்த நடிகர் பிரபு: அரசியலில் குதிக்கின்றாரா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சமீபத்தில் விடுதலையான சசிகலாவை திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் வரிசையாக சந்தித்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்