முதல் நபராக உதவிட தயார்: வைரமுத்து அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி விட்டதாகவும் புதிதாக கொரோனா நோயாளிகளை அனுமதிக்க படுக்கைகள் காலி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை உள்பட பல நகரங்களில் ஓட்டல்கள் தற்போது கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் திருமண மண்டபங்களும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கவியரசு வைரமுத்து அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவெடுத்தால் முதல் நபராக தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று கூறியுள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,
முதல் மண்டபமாக
எங்கள் 'பொன்மணி மாளிகை'
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.
மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?
திருமண மண்டபங்களைத்
— வைரமுத்து (@Vairamuthu) May 8, 2021
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,
முதல் மண்டபமாக
எங்கள் 'பொன்மணி மாளிகை'
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.
மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout