கொரோனாவுக்கு மூன்றே மூன்று தீர்வுகள்: வைரமுத்து

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.3 கோடியை தாண்டி விட்டது என்பதும் இந்திய அளவில் 31 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து உலக மக்களை பாதுகாக்க உலக விஞ்ஞானிகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தடுப்பூசி கண்டுபிடிக்கவும், மருந்து கண்டுபிடிக்கவும், மில்லியன் கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மூன்றே மூன்று தீர்வுகள் இருப்பதாக கவியரசு வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவதுள்.

மூன்றே தீர்வுகள்;
கொரோனா கொல்லுயிரி
தானே அழிவுறுதல்
அல்லது
வருமுன் காக்கவும் வந்தபின்
போக்கவும் மருந்தறிதல்
அல்லது
மழைத்துளிகளின் இடுக்கில்
நனையாமற் பறக்கும் கொசுவைப்போலக்
கொல்லுயிரிக்குச் சிக்காமல்
வாழ்முறை வகுத்தல்.
நான் அறிவியலை நம்புகிறேன்

More News

இந்த ஒரு வருடம் மட்டுமே வேண்டவே  வேண்டாம்: ஜெயம் ரவி வேண்டுகோள்

இந்த வருடம் மட்டும் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜகவில் இணையும் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர்?  பரபரப்பு தகவல்

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என பரபரப்பாக பேசப்பட்டவர் திடீரென இன்று பாஜகவில் இணைவதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கறுப்பினத்தவரை பின்னால் இருந்து பலமுறை சுட்ட போலீஸ்!!! US இல் வெடிக்கும் அடுத்த சர்ச்சை!!!

அமெரிக்காவில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸார் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

சரசரவென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!!! இடிபாடுகளுக்குள் 70 சிக்கியதாக கவலை!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் நேற்று மாலை 5 மாடிக்கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீடிரென்று சரிந்து விழுந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

எஸ்பிபி சைகை காட்டி என்னை நலம் விசாரித்தார்: எஸ்பிபி சரண் நெகிழ்ச்சி 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீராக இருப்பதாக