'பாட்ஷா' படத்திற்கு சம்பளம் குறைத்து கொடுத்தார்.. அதன் பின் நடந்தது என்ன? வைரமுத்து..!

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாட்ஷா’ படத்திற்கு தான் பாட்டு எழுதிய போது சம்பளம் குறைத்துக் கொடுத்ததாகவும் அதன் பின் நடந்தது என்ன என்பது குறித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

பாட்ஷா படத்திற்குப்
பாட்டெழுத அழைத்தார்கள்

‘உங்களுக்கு எவ்வளவு
சம்பளம்’ என்றார்
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன்

‘முழுப்படத்துக்கு
50ஆயிரம்’ என்றேன்

அதிர்ச்சியானவர்
நாற்காலியைவிட்டு
அரை அடி பின்வாங்கினார்

‘பாடலாசிரியருக்கு
இவ்வளவு பணமா?
நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு
500 முதல் 1000 வரை தருவதுதான்
வழக்கம்’ என்றார்

‘இப்போது நான்வாங்கும்
ஊதியத்தைச் சொல்லிவிட்டேன்;
அப்புறம் உங்கள் முடிவு’
என்றேன்

‘பாடல் எழுதுங்கள்;
பார்க்கலாம்’ என்றார்

எல்லாப் பாடலும்
எழுதி முடித்தவுடன்
நான் கேட்டதில் 5ஆயிரம்
குறைத்துக்கொண்டு
45ஆயிரம் கொடுத்தார்

நான் பேசாமல்
பெற்றுக்கொண்டேன்

வெளியானது ‘பாட்ஷா’;
வெற்றியும் பெற்றது

படத்தின் வெற்றியில்
பாட்டுக்கும் பங்குண்டு என்று
பேசப்பட்டது

ஒருநாள்
நாகேஸ்வர ராவ் பூங்காவில்
பாட்டெழுதிக்கொண்டிருந்தேன்
அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று
என்னைக் கண்டு நின்றது

காரிலிருந்து இறங்கி வந்தவர்
‘வீட்டுக்குப் போகும்போது
ஆர்.எம்.வீ ஐயா உங்களை
அலுவலகம் வந்துபோகச்
சொன்னார்’ என்

றார்

சென்றேன்

ஆர்.எம்.வீ என் கையில்
ஓர் உறை தந்தார்

‘என்ன இது?’ என்றேன்

‘நாங்கள் குறைத்த பணம்
5000’ என்றார்

‘நன்றி’ என்று
பெற்றுக்கொண்டேன்

தயாரிப்பாளர் குறைத்தாலும்
தமிழ் விடாது என்று
கருதிக்கொண்டேன்

அந்தப் பணம் 5ஆயிரத்தை
டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா
நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக
வழங்கினேன்

More News

நடிகை அளித்த புகார்.. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஆட்சி மாற்றத்தால் அதிரடி நடவடிக்கை..

நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்சி மாற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவதா? அந்த பெண் யார் தெரியுமா? ஜெயம் ரவி..!

ரு சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், ஜெயம் ரவியுடன் இணைத்து இன்னொரு பெண்ணை பற்றி பேசப்படுவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "என்னை இன்னொரு பெண்ணுடன்

ஒரு மாசத்துக்கு மேல் ஒரு பொண்ணோட அவன் இருக்க மாட்டான்: மகத் நடித்த 'காதலே காதலே' டீசர்..!

பிக் பாஸ் மகத் நடித்த "காதலே காதலே" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

நடிகை பார்வதி நாயர், 'அயலான்' தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன நடந்தது?

பிரபல நடிகை பார்வதி நாயர் மற்றும் "அயலான்" படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் உட்பட ஏழு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் உள்ளன.

முன்னாள் பிரதமருடன் படித்தவர் அமிதாப்பச்சன்: ரஜினிகாந்த் சொன்ன தகவல்..!

"வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டின் போது, நடிகர் அமிதாப் பச்சன் முன்னாள் பிரதமருடன் படித்தவர் என்ற ரஜினிகாந்த் கூறிய தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரஜினிகாந்த் மேலும்