இது தீப்பிடித்த காடு, பறவைகளே! பத்திரம்: ஊரடங்கு தளர்வு குறித்து வைரமுத்து!
- IndiaGlitz, [Monday,August 31 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. பேருந்து, மெட்ரோ ரயில் ஓடும், மால்கள் திறக்கப்படும், கோயில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இபாஸ் ரத்து என்பது அனைவருக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மக்கள் கவனக்குறைவுடன் இருக்க கூடாது என்றும், தங்களுக்குள் கட்டுப்பாட்டை கடைபிடித்து கொள்ள வேண்டும் என்றும், அரசும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கவியரசர் வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:
ஊருக்கு வழங்கப்பட்ட
ஊரடங்கின் தளர்வில்
உயிர்க் கொல்லி
நுழைந்துவிடக் கூடாது.
மீண்டும் இயங்கப்போகும்
வாழ்வியல் வெளியில்
கடும் கட்டுப்பாட்டைப்
பெரிதும் கைக்கொள்வீர்
பெருமக்களே!
இது தீப்பிடித்த காடு
பறவைகளே! பத்திரம்.
ஊருக்கு வழங்கப்பட்ட
— வைரமுத்து (@Vairamuthu) August 31, 2020
ஊரடங்கின் தளர்வில்
உயிர்க் கொல்லி
நுழைந்துவிடக் கூடாது.
மீண்டும் இயங்கப்போகும்
வாழ்வியல் வெளியில்
கடும் கட்டுப்பாட்டைப்
பெரிதும் கைக்கொள்வீர்
பெருமக்களே!
இது தீப்பிடித்த காடு
பறவைகளே! பத்திரம்.#lockdown #Unlock4 #Corona #TNLockdown